சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் மனைவிக்கு அரசு வேலை - மாவட்ட ஆட்சியர் உறுதி

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் மனைவிக்கு அரசு வேலை - மாவட்ட ஆட்சியர் உறுதி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் சில ஆண்டுகளாக குவைத்தில் வேலை செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டைச் சேர்ந்தவரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். குவைத் அரசாங்கமும் முத்துக்குமரன் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதி செய்தது.

முத்துக்குமரன் குடும்பத்தார் தமிழக அரசிடம் இது குறித்து முறையிட்டனர். முத்துக்குமரனின் உடலை தமிழகம் கொண்டுவர உதவ வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் பிறகு அரசின் முயற்சியால் முத்துக்குமரன் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் முத்துக்குமரன் இறப்பினால் நானும் எனது இரண்டு குழந்தைகளும் வறுமையில் இருக்கிறோம். தனக்கு அரசு வேலை தந்து உதவ வேண்டும் என்று அவருடைய மனைவி வித்யா வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் கோரிக்கை வைத்தார்.

அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான், முத்துக்குமரன் மனைவி வித்யா கொண்டு சென்ற மனுவில் அரசு வேலைக்கு பரிந்துரை செய்வதாக எழுதி கொடுத்தார். அதனை இன்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் வித்யா கொடுத்தார் அதற்கு மாவட்ட ஆட்சியர் அரசு வேலை கொடுப்பதற்கு உரிய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com