ஆணழகன் ஆசையில் உடற்பயிற்சியோடு ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்ட ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு!

ஆணழகன் ஆசையில் உடற்பயிற்சியோடு ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்ட ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு!

டலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறேன் பேர்வழி என்று கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள் சிலர் அவ்வப்போது மாரடைப்பு போன்ற சம்பவங்களால் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை ஆவடி அருகே ஜிம் மாஸ்டரும், ஆணழகனுமான ஆகாஷ் என்பவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீப காலமாக ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று வந்த 25 வயதான ஜிம் மாஸ்டர் ஆகாஷ் திடீரென ரத்த வாந்தி எடுத்ததால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி செய்து பரிசோதித்ததில், அவரது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து இருந்தது தெரிய வந்துள்ளது. இவர் தனது உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதிகளவு ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொண்டதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தொடர்ந்து இதுபோன்ற ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்து வருவதாகவும், இதன் காரணமாக இவரது குடல் மற்றும் கிட்டினி போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மூச்சு விடுவதற்குக் கூட சிரமப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ் நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com