புத்தாண்டில் பெண்களுக்கு மகிழ்ச்சி! ரூபாய் ஆயிரம் உதவித்தொகை குறித்த அமைச்சரின் பேச்சு...

புத்தாண்டில் பெண்களுக்கு மகிழ்ச்சி! 
ரூபாய் ஆயிரம் உதவித்தொகை குறித்த அமைச்சரின் பேச்சு...

ந்தப் புத்தாண்டில் பல பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகிறது. ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குவது குறித்து நிதி அமைச்சர் தெரிவித்த செய்தி. மதுரை ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் நடந்த அங்கன்வாடி மையத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் பெண்களுக்கான மாத உதவித்தொகை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் இது .

“திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது தமிழக நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது. தற்போது தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் நிதி நிலைமை சீராகி வருகிறது. வரி வருவாயில் 21% வட்டிக்கு செலவிடப்பட்டது. தற்போது இதனை பதினாறு சதவீதமாக குறைத்து இருக்கிறோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரசின் வருவாய் செலவினங்களை ஆய்வு செய்துவருகிறோம். பல திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், எந்தத் திட்டத்துக்கும் மத்திய அரசு சரியாக நிதி தராததால் அதனைச் செயல்படுத்த முடியவில்லை. 2023 ஆம் ஆண்டின் மாநில உற்பத்தி ரூபாய் 24 லட்சம் என்று இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது 2023 - 24 ஆம் ஆண்டில் ரூபாய் 30 லட்சம் இருக்கும். பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தொகை வழங்குவதற்கான திட்டத்துக்குத் தரவுத்தளம் அமைத்தல் உண்மைத் தன்மையைக் கண்டறிதல் என 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. இந்தத் திட்டத்தை இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்வார்...” என்று கூறியிருப்பது இந்தப் புத்தாண்டில் பெண்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சி செய்தி!

     தமிழக அரசின் நிதிநிலைமை சீராகி தேர்தல் அறிக்கையில் சொன்னபடி வரும் உதவித்தொகை வறிய நிலையில் உள்ள பல பெண்களின் அன்றாட வாழ்வுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அத்தொகையை விரைவில்  பெறுவதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com