டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவியுள்ளது.மழை காலம் வர உள்ளதால் மேலும் அதிகரிக்கலாம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு தினசரி 500 என்ற நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலும், அதனோடு பருவ கால காய்ச்சலும் அதிகரித்து வருவது கவலை தருகிறது. ஜனவரி முதல் ஜூலை வரை 1915 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்க பட்டுள்ளனர். தற்போது மழை அதிகமாக பெய்ய தொடங்கியுள்ளதால்.

அங்காங்கே தேங்கி இருக்கும் தண்ணீரில் ஏடிஸ் வகை கொசுக்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்த சில மாதங்களில் டெங்கு காய்ச்சல் மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, பள்ளி கல்வித்துறையோடு , உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெங்கு தடுப்பு பணி
டெங்கு தடுப்பு பணி

பொதுமக்கள் காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே, சுற்றுப்புறத்தில் நல்ல தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்கள், இடங்களை கண்டறிந்து சுத்தப் படுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com