பொத்துக்கிட்டு ஊத்தப் போகும் வானம்; சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கனமழை
கனமழை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று முதல் 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த வாரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்தது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறக்கூடும் என்று சென்ன வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படியே தமிழ்நாட்டில் வங்கக் கடலில் வடக்கு இலங்கை பகுதிக்கு அருகே நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு  மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

 இது தொடர்பாக மேலும் வெளியிட்ட தகவல்;

 சென்னையில் 10-ம் தேதிமுதல் 13-ம் தேதி வரை மிக கனமழை பெய்யும். அதேசமயம், வங்கக் கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று  புயலாக மாற வாய்ப்பில்லை. ஆனால் கன மழைக்கு வாய்ப்புண்டு என்பதால், சென்னைக்கு 11 மற்றும் 12-ம் தேதிகளில் ஆரஞ்ச் அலர்ட்டும் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தீவிரம் அடையும். அதன்பின் தமிழ்நாடு, புதுவை கடற்கரையை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.

இன்று தமிழ்நாட்டில், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, இராமநாதபுரம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 –இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com