சென்னையில் ஸ்டாப்லைன் கோட்டைத் தாண்டினால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஸ்டாப்லைன் கோட்டைத் தாண்டினால் அபராதம் 
எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஸ்டாப்லைன் கோட்டைத் தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை சென்னை போலீசார் தொடங்கியுள்ளனர்.

வாகன ஓட்டிகளே உஷார்!

இனி சென்னை ரோட்டில் சிக்னல் கடக்கும் போது ஸ்டாப்லைன் கோட்டிற்கு முன்னாடியே வண்டியை நிறுத்தி பழகுங்க சென்னை வாசிகளே! இல்லையென்றால் அபராதமாக 500 ரூபாய் பழுத்து போகும் ஜாக்கிரதை! அதேபோல் இனி வாகன நம்பர் பிளேட்களில் உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்களையோ, திரைப்பட நடிகர்களையோ , இல்லை உங்களுக்கு சவுகர்யப்பட்ட மொழியிலோ வைத்திருந்தா உடனே கழட்டி போடுங்க. இல்லையென்றால் அபராத சலான் ஒட்டப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலை விதிகளை மீறும் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையை சென்னை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, மதுபோதையில் வாகனம் இயக்குதல் போன்ற விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முதல் ஸ்டாப்லைன் கோட்டைத் தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை சென்னை போலீசார் தொடங்கியுள்ளனர். இதற்கான சென்னை முழுவதும் 287 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்களையும் போலீசார் நடத்தினர்.

சென்னையில் விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டு இருந்த நம்பர் பிளேட்டுகளை அகற்றி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். சென்னை முழுவதும் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் விதிகள் மீறி வைக்கப்பட்டிருந்தால் அபராத சலான் ஒட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சில தினங்களுக்கு முன் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சர்த்கர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிவிப்பின் படி சென்னை முழுவதும் உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் போக்குவரத்து விதிகள் மீறி வைக்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.குறிப்பாக போக்குவரத்து விதிகள் மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்கள் வாகனத்தில் 500 ரூபாய்க்கு அபராதம் விதிக்கப்பட்டு போக்குவரத்து போலீசாரால் சலான்கள் ஒட்டப்பட்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com