ஒரே சமயத்தில் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் கணவன் மனைவி!

ஒரே சமயத்தில் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் கணவன் மனைவி!

மிழக அரசு நேற்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம், பணி நியமன ஆணைகள் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதில் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் கணவன் மனைவியுமான விஷ்ணு சந்திரன் மற்றும் ஆஷா அஜித் ஆகியோர் ஒரே நேரத்தில் இருவேறு மாவட்ட ஆட்சியர்களாகப் பணி நியமனம் பெற்று இருக்கிறார்கள். இதற்கு முன்பு விஷ்ணு சந்திரன் நகராட்சி நிர்வாகத் துறையிலும், ஆஷா அஜித் வழிகாட்டுக் குழுவின் பொறுப்பு இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரில் விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று இருக்கிறார். இவர் தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளார். வருவாய் துறையில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. அதேபோல், சிவகங்கை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று இருக்கும் ஆஷா அஜித் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர். இவர் 2015 ஜூலை 4ம் தேதி, சிவில் சர்வீஸ் தேர்வில் 40வது ரேங்கில் வெற்றி பெற்று இருக்கிறார். ஆஷா அஜித் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சப்-கலெக்டராகவும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும் பொறுப்பு வகித்து இருக்கிறார்.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்த ஆஷா அஜித், தற்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கணவன், மனைவியான விஷ்ணு சந்திரன்-ஆஷா அஜித் இருவரும் அடுத்தடுத்த மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் பணி நியமன ஆணை பெற்று இருக்கிறார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com