சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பரவல் ... இனி முகக்கவசம் கட்டாயம்!

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பரவல் ... இனி முகக்கவசம் கட்டாயம்!

Published on

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் சற்று தணிந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்குகிறது மாநகராட்சி அமைப்பு.

நேற்று பொதுசுகாதாரத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகிறது என மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அருகிலுள்ள மருத்துவனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்றி பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இனி முகக்கவசம் அணிவது அவசியமாகிறது.

logo
Kalki Online
kalkionline.com