தமிழகத்தில் நூதன ஆன்லைன் மோசடியில் இவ்வளவு பணம் அபேஸா?

தமிழகத்தில் நூதன ஆன்லைன் மோசடியில் இவ்வளவு பணம் அபேஸா?

தமிழகத்தில் மட்டுமே கடந்த ஓராண்டில் நூதன முறையில் பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.288.38 கோடி பணம் திருடப்பட்டு உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து பயன்பாடுகளும் ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது. ஆனால் தற்போது ஆன்லைன் முறையில் மோசடிகள் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தினந்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உக்திகளை கையாளுகிறார்கள். இதனால் பொதுமக்கள் தங்களின் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர்

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 3 மாதத்தில் ஆன்லைன் மூலமாக 12 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.67 கோடி ரூபாய் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளது. இதில் ரூ.49 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடி பணம் 3 மாதத்தில் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக 29 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி ஒரு வருடத்தில் 288 கோடிக்கும் அதிகமான பணம் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து சுருட்டப்பட்டு இருக்கிறது. பொது மக்களின் புகாரின் அடிப்படையில் 106 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.ரூ.27 கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் சிம்கார்டுகளை தடைசெய்யப்பட்டு வருகிறது. இதன்படி 27 ஆயிரத்து 905 சிம் கார்டுகள் தடைசெய்ய மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 22 ஆயிரத்து 240 சிம்கார்டுகள் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தேவையில்லாத நபர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை கண்டு கொள்ளாமல் உஷாராக இருக்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com