மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட் தயாரிக்கும் பணி! இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கருத்து!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்  தயாரிக்கும் பணி!  இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கருத்து!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் புகழ்பெற்ற விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான சிவனை கௌரவப்படுத்தும் விதமாக விருது வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட சிவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.

விண்ணுக்கு மனிதனை அனுப்புவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கு 3 முக்கிய தகுதி சோதனைகள் நடத்தப்பட வேண்டும். முதலில் பாதுகாப்பை முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் சுற்றுச்சூழல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். எனவே ராக்கெட் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கு தேவையான சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக 2 ரோபோக்கள் ராக்கெட்டில் வைத்து அனுப்பப்படும். அது வெற்றிகரமாக முடிந்த பின் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள். விண்ணுக்கு மனிதனை அனுப்ப ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. தரை தள சோதனை, விண்ணில் ஏவும் சோதனை போன்றவைகளும் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இந்த சோதனைகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் முடிவடையும். விரைவில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடைபெறும்.

ககன்யான் என்பது மனிதர்களை பாதுகாப்பாக விண்ணுக்கு அனுப்பி 7 நாட்கள் தங்கி சோதனைகள் செய்த பிறகு மீண்டும் பூமிக்கு திருப்பி வரும் திட்டமாகும். அதற்கான தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை விண்ணுக்கு ராக்கெட்கள் மூலம் செயற்கைகோள்களை மட்டுமே அனுப்பிவந்தோம். மனிதர்களை அனுப்பும் போது அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் தேவை. மனிதர்களை அனுப்பக் கூடிய வகையில் ராக்கெட்டை உருவாக்க வேண்டும். அதற்கான பணிகள் முடிவடைந்து விட்டன.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பியவுடன் பூமியில் இருப்பது போன்ற சீதோஷண நிலையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக சுற்றுசூழலுக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்தும் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் மனிதர்கள் திரும்பி வரும் போது அதிகமான வெப்பத்தை தாங்க கூடிய தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. முக்கியமாக பூமியில் இறங்கும் போது இறங்கும் இடத்தை தேர்வு செய்வது உள்ளிட்ட பலதரப்பட்டசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இவை அனைத்தும் முடிந்த பிறகு இரண்டு விண்கலங்களை மனிதர்கள் இல்லாமல் முதலில் ரோபோகளை அனுப்பி பின்னர் அதனுடைய செயல் திறன்களை ஆராய்ந்து

பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு தான் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவார்கள் என தெரிவித்தார்.

சந்திராயன், ஹார்பிடர் விண்கலம் நிலவை சுற்றிஆராய்ச்சி செய்து வருகிறது நிலவுக்குள் இறங்கி ஆராயும் வேண்டர் விண்கலம் செயல்திறன் இழந்தது. அதிலிருந்து நிறைய தகவல்கள் வந்துள்ளன அதை பயன்படுத்தி புதிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன” என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com