சுபஸ்ரீ வழக்கில் நியாயம் கிடைக்கும்  -   முதல்வர் ஸ்டாலின் உறுதி

 சுபஸ்ரீ வழக்கில் நியாயம் கிடைக்கும் - முதல்வர் ஸ்டாலின் உறுதி

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் பழனிகுமார். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபஶ்ரீயும் (34) தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்துக்கு பயிற்சிக்காக கடந்த 11ஆம் தேதி வந்துள்ளார். அவரது கணவர் காலை 6 மணியளவில் யோகா மையத்தில் விட்டு சென்றுள்ளார். டிசம்பர் 18ஆம் தேதியுடன் இந்த பயிற்சி முடிவடைந்த நிலையில் அவரை அழைத்து செல்ல கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையத்துக்கு வந்துள்ளார்.

இதற்காக காலை 6 மணிக்கே வந்து காத்திருத்த அவர் 11 மணி ஆகியும் சுபஶ்ரீ வராத நிலையில், ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை தொடங்கினர்.

மாயமான சுபஸ்ரீ, செம்மேட்டை அடுத்த காந்தி காலனியில் உள்ள ஒரு விவசாய தோட்டக் கிணற்றில் சடலமாக கடந்த ஜனவரி1-ம் தேதி கண்டெடுக்கப்பட்டார். அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

ஈஷா யோகா மையத்துக்குச் சென்று, மாயமான சுபஸ்ரீ, சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது மரண வழக்கில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

 இது குறித்து சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

"சுபஶ்ரீ காணாமல் போனதை அறிந்து 19.12.2022 அன்று ஆலந்துரை காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் முறையாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் துலுக்கன்காடு தோட்டம் அருகில் இருக்கக்கூடிய கிணற்றில் சுபஶ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது (postmortem).

சுபஶ்ரீயின் உடல் கணவர் பழனிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக்கூடிய கண்காணப்பு கேமாராக்கள் (CCTV) பதிவுகள், சுபஶ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்" என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com