ஆகஸ்ட் 15-ம் தேதி கிராமசபை கூட்டம்: தமிழக அரசு உத்தரவு! 

ஆகஸ்ட் 15-ம் தேதி கிராமசபை கூட்டம்: தமிழக அரசு உத்தரவு! 

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற 15-ம் தேதி நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது; 

தமிழ்நாட்டில் முக்கிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு கிராம மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அதுகுறித்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் 15-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு நடத்தப்படும் கிராம சபை கூட்டங்கள் குறித்து முன்கூட்டியே கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இக்கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை அந்தந்த கிராம மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்தி அவற்றுக்கான அறிக்கையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com