சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி; இன்றுடன் பணி ஓய்வு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி; இன்றுடன் பணி ஓய்வு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுவதையடுத்து அவருக்கு பிரிவுபசார விழா நடைபெறுகிறது.

-இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வட்டாரத்தில் வெளியான தகவல்;

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுவதையடுத்து அவருக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரிவுபசார பாராட்டு விழா நடைபெறுகிறது.

இவ்விழாவில், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மற்றும் பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் பாராட்டு தெரிவிக்க உள்ளனர்.

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இங்கு ஓய்வுபெறுவதையடுத்து அவரை டெல்லியிலுள்ள கடத்தல்காரர்கள் மற்றும் அன்னிய செலாவணி மோசடியாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (SAFEMA) தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது.

அதன்படி ஓரிரு நாட்களில் அவர் பதவியேற்க உள்ளார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக நீதிபதி துரைசாமி நாளை பொறுப்பேற்கவுள்ளார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், நாளை பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதிபதி துரைசாமி, இம்மாதம் 21-ம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com