தங்கம் விலை அதிரடி சரிவு: மக்கள் மகிழ்ச்சி! 

தங்கம் விலை அதிரடி சரிவு: மக்கள் மகிழ்ச்சி! 

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. 

 –இதுகுறித்து சென்னை தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்ததாவது: 

 கடந்த ஆண்டு ஏற்பட்ட சர்வதேச அளவில் ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம்  தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,876-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதோபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.63.80-க்கும், ஒரு கிலோ 63,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இவ்வாறு தெரிவிக்கப் பட்டது 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com