காதலுக்கு மரியாதை!

மகேந்திரன் - தீபா
மகேந்திரன் - தீபா

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மகேந்திரன் மற்றும் தீபா தற்போது குணமடைந்து அங்கேயே பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளமுடிவு செய்திருந்தனர்.

இவர்களது திருமணம் மருத்துவமனை அருகில் உள்ள கோவிலில் நடைபெற்றது. இவர்களது காதல் திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சுப்பிரமணியன் பணி ஆணையை கல்யாண பரிசாக வழங்கினார்.

நிரந்தர வருமானம் இருந்தால் அவர்கள் வாழ்வு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார். அவர்கள் வெளியில் சென்று வேலை செய்வதை விட இங்கு இருந்து இங்கு உள்ளவர்களுக்கு சேவை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 காதல் திருமணம்
காதல் திருமணம்

இவர்கள் இருவருக்கும் இங்கேயே வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்த வேலை வாய்ப்பு ஆணையை மேடையில் கல்யாண பரிசாக அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்.

அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டது தான் இதுவரை நான் கலந்து கொண்ட பல திருமணங்களில் மறக்க முடியாதது. இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com