வள்ளுவர் கோட்ட ஆர்ப்பாட்டத்தில் சொந்தக் கட்சிப் பிரமுகரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கிய கரு.நாகராஜன்! வைரல் வீடியோ!

வள்ளுவர் கோட்ட ஆர்ப்பாட்டத்தில் சொந்தக் கட்சிப் பிரமுகரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கிய கரு.நாகராஜன்! வைரல் வீடியோ!

மிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக அரசு பொய் வழக்கு போட்டிருப்பதாக கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அந்த ஆர்பாட்டத்தில் சென்னை மத்திய மாவட்ட பாஜக தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசத் தொடங்கினார். அப்போது அவரது பேச்சைக் கண்டிப்பது போல திடீரென அவரிடம் இருந்து மைக்கைப் பறித்தார் பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜ்.

‘இன்னைக்குத் தமிழகத்துல ஒவ்வொரு கூட்டத்திலும் பாஜக தான் எதிர்கட்சினு நிரூபிச்சிட்டிருக்கோம். எடப்பாடி ஆளுமை இல்லாத எடப்பாடி…’

- என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பது போல சென்னை மத்திய மாவட்ட பாஜக தலைவர் பேசத்தொடங்கவே படக்கென அவரிடம் இருந்து மைக்கைப் பிடிங்கி அவரது பேச்சை ஸ்விட்ச் ஆஃப் செய்தார் பாஜக மாநில துணைத்தலைவரான கரு.நாகராஜ்.

மைக்கைப் பிடுங்கியதோடு ‘மிக்க நன்றி, அடுத்தபடியாக கிருஷ்ணகுமார் அவர்கள் தொடர்ந்து இந்தக் கூட்டத்தை நடத்துவார் என்று அறிவித்தார். கரு.நாகராஜனின் இந்தச் செயலால் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜக நிர்வாகிகள் சற்று பரபரப்படைந்து விட்டனர்.

அதிமுக வின் இடைக்கால பொதுக்குழுத் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பாஜக நிர்வாகிகளில் ஒருவர் வெளிப்படையாக பொதுவெளியில் இப்படி விமர்சிப்பதன் வாயிலாக இரு கட்சிகளுக்கும் இடையிலான கருத்துவேறுபாடு வெளிப்பட்டிருக்கிறது. ஒருபக்கம் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அதிமுக பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவிருக்கிறது எனும் பிரச்சாரம் வலுத்து வரும் நிலையில் உள்கட்சி பிரமுகர்கள் அந்தக் கருத்தை வலுவிழக்கச் செய்யும் விதமாக எடப்பாடியை கடுமையாக விமர்சித்து பொதுக்கூட்டங்களில் இப்படிப் பேசி வருவது இருகட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தக்கூடும். அதைக் கண்டிக்கும் விதமாகத்தான் கரு.நாகராஜ் அப்படி நடந்து கொண்டார் என்று பாஜக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

வடமாநிலத் தொழிலாளர்கள் பெருவாரியாக தமிழகத்தில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருப்பது அவர்கள் மீதான தமிழக மக்களின் வெறுப்பைக் காட்டுவது போல ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது. தமிழக முதல்வரும் அவரது கூட்டணிக் கட்சியினரும் இதைக் கண்டித்து வடமாநிலத் தொழிலாளர் விரோதப் போக்கை தவிர்க்குமாறு இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீப காலமாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். அவரது பேச்சு வடமாநிலத்தாரிடையே விரோதத்தை வளர்க்கும் விதமாக இருப்பதாகக் கூறி தமிழக காவல்துறை அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இதைக் கண்டித்து அதாவது அண்ணாமலை மீது போடப்பட்டவை பொய் வழக்குகள் எனக்கூறி பாஜகவினர் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த இந்தப் பரபரப்பான காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com