கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிறுத்தம் டூ சென்னை டவுன் போக்குவரத்துக்கு கூடுதல் பேருந்துகள் தேவை!

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிறுத்தம் டூ சென்னை டவுன் போக்குவரத்துக்கு கூடுதல் பேருந்துகள் தேவை!

கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் ஜூன் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் எனத் தகவல்.

அதையொட்டி சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (Chennai Unified metropolitan Transport Authority (cumta)) நகரின் பிற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு தடையற்ற பயண இணைப்பை உறுதிசெய்ய தயாராகி வருகிறது.

அதன் முதற்கட்டமாக MTC தாம்பரம் மற்றும் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரை ஷட்டில் சேவைகளை வழங்கவும், கிளாம்பாக்கம் டெர்மினஸுக்கு பேருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பரிந்துரைத்துள்ளது.

பயணிகளின் வருகை மற்றும் கலைதல் குறித்த ஆய்வின் அடிப்படையில் கும்டா அதிகாரிகள் இந்த ஆலோசனையை வழங்கினர். தெற்கு CMBT, கோயம்பேடு, பெருங்களத்தூர், தாம்பரம் மற்றும் ஆலந்தூர் செல்லும் பேருந்துகளில் பயணிகள் ஏறும் இடங்கள், பேருந்து நிலையத்தை அடைவதற்கான பயண முறை, பயண நேரம் மற்றும் கிளாம்பாக்கத்தை அடைய விருப்பமான பயண முறை பற்றிய விவரங்கள் அனைத்தும் கணக்கெடுப்பில் கோரப்பட்டிருக்கின்றன.

கும்டாவின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில், “80% பயணிகள் போர்டிங் பாயின்ட்டுகளுக்குச் செல்ல MTC பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் மற்ற முறைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. எனவே, CMRL மற்றும் ரயில்வே வசதிகள் கிளாம்பாக்கத்திற்கு தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கும் வரை, MTC பயணிகளுக்கு ஒரு முக்கியமான இணைப்பாக இருக்கும். தென் மாவட்டங்களில் இருந்து தினமும் சராசரியாக 65,000 பயணிகள் கிளாம்பாக்கம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பண்டிகை காலங்களில் ஒரு லட்சம் வரை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மல்டிமாடல் ஒருங்கிணைப்பு புள்ளியான கிளம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு தடையற்ற பயணத்தை வழங்க, கும்டா ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஷட்டில் பேருந்துகளை இயக்க பரிந்துரைத்துள்ளது.

"தாம்பரத்தில் இருந்து பயணிகள் நகரின் பிற பகுதிகளுக்கு பேருந்துகளில் ஏறலாம் அல்லது நகரின் வடக்குப் பகுதிகளை அடைய புறநகர் ரயிலில் ஏறலாம்" என்று அந்த MTC அதிகாரி கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com