கடைசி நாள் - மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் கிடையாது!

கடைசி நாள்  - மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் கிடையாது!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் எனவும் கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாநில அரசு அறிவித்தது. இணைப்புப் பணிகள், நவம்பர் 15ம் தேதி தொடங்கின. 2, 800 குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

EB
EB

தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய மின் இணைப்பை பெற்றிருக்கும் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதனை இணைக்க அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை 99 சதவீதம் பேர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், மின் வாரியம் அளித்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. மின் இணைப்புடன் ஆதாரை இதுவரை 2 கோடியே 66 லட்சம் பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள். கூடுதல் அவகாசம் வழங்கப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com