மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள்... தலைவர்கள் வாழ்த்து !

மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள்... தலைவர்கள் வாழ்த்து !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி, அரசியல் கட்சியினர் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிறந்த நாளையொட்டி, மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் “மார்ச் 1 திராவிட பொன்நாள்”, “முயற்சி முயற்சி முயற்சி அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிறந்தநாள் காணும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர் , திமுக தலைவர், அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். முதலமைச்சரின் பிறந்தநாள் என்பதைவிட ஜனநாயகத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com