மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி
மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி; இன்று உள்ளூர் விடுமுறை!

தமிழகத்தில் மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும்  காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றது. இதன் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் இன்று நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் வருகை காரணமாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

புராண ஐதீகத்தின்படி கங்கையில்  பக்தர்கள் புனித நீராடி, தங்கள் பாவங்களை கரைத்ததால் கருமை நிறம் அடைந்த கங்கை நதி, சிவபெருமானை வழிபட்டு  மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் புனித நீராடி தூய்மையடைந்ததாக ஐதீகம்.

அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.

அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி மாதம் 1-ம் தேதி துலா உற்சவம் தொடங்கி, அதன் 10 நாள் நடைபெறும் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் இன்று நடைபெற்றது. முன்னதாக மயிலாடுதுறை வடாரண்யேஸ்வரர் கோவிலில் கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விழாவின் இறுதியாக திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இன்று காவிரி நதிக்கரையில் கடைமுக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டார்.  

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com