மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் முதல் பெண் சோப்தார் நியமனம்!

பெண் சோப்தார் லலிதா
பெண் சோப்தார் லலிதா

மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண் நீதிபதிகளுக்கான ‘சோப்தாராக’ (செங்கோல் ஏந்தி செல்பவர்) செயல்படுவார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண்‘சோப்தாராக’ திலானி என்பவர் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து தற்போது, மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் முதன் முதலாக பெண் சோப்தாராக லலிதா நியமிக்கப் பட்டுள்ளார். இவர், உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி மாலாவுக்கான சோப்தாராக  பணியில் நியமிக்கப் பட்டுள்ளார்.  மதுரையை சேர்ந்த பட்டதாரியான லலிதா, தனக்கு இந்த சோப்தார் பணி மிகவும் பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com