விவசாயிக்கு 4 வாரங்களில் கடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

விவசாயிக்கு கடன் வழங்க மறுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 4 வாரங்களில் அவருக்கு கடன் வழங்க உயர் நீதி மன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.

சமீப காலங்களில் வங்கிகளில் கடன் வாங்குவதென்பது பெரும் நடைமுறையாக இருந்து வருகிறது. கல்விக் கடன், நகைக் கடன், வியாபார கடன், விவசாய கடன் என பல்வேறு கடன்களை வழங்கி வருகிறது. இதற்காக வங்கிகள் கடை பிடிக்கும் நடைமுறைகள் அவ்வளவு எளிதானதல்ல. இது குறித்து பல்வேறு புகார்கள் வருவதும் வழக்கம்.

இது தொடர்பாக விவசாயிகளுக்கு விவசாய கடன் தர மறுக்கும் என்.மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் கார்த்திக் மற்றும் செயலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் இவ்வாறு உத்தரவிட்டார். விவசாயிக்கு கடன் வழங்க மறுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 4 வாரங்களில் அவருக்கான கடன் வழங்க உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா என்.மங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் என்ற விவசாயிக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கி கடன் வழங்க மறுத்துள்ளது. இதனை எதிர்த்து அவர் உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரின் கடன் விண்ணப்பத்தை ஏற்று 4 வாரங்களில் அவருக்கு விவசாய கடனை வழங்க வேண்டும் என கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கிக்கு உயர் நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com