எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு எப்போது தெரியுமா?

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு எப்போது தெரியுமா?

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 36 மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 50 இடங்கள், 2 பல் மருத்துவ கல்லூரிகளில் 200 இடங்கள், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 400 இடங்கள் உள்ளன. இவற்றில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு மொத்தம் 40 ஆயிரத்து 193 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 16ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வை  மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு ஜூலை 20 ந் தேதி முதல் ஆகஸ்ட் 6 ந் தேதி வரையில் முதல் சுற்று மாணவர் சேர்க்கை கலந்தாய்வினை நடத்துகிறது.

இந்த நிலையில், மாநில கல்லூரிகளில் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான ம்ருத்துவ கலந்தாய்வு  வரும் 22ஆம் தேதி தொடங்கும் என மருத்துவக் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கான போதிய கால அவகாசம் இல்லாததால், மாநில ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கும் அன்றைய தினமே கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வில் மாணவர்கள் வீட்டில் இருந்தோ, அல்லது மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மையங்களில் இருந்தோ கலந்துகொள்ளலாம் எனவும் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com