தமிழ்நாடு அரசிற்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாடு அரசிற்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாடு அரசிற்கும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையே ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு தொழில் துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.150 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை காணொலி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு, அரசிற்கும் ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

சென்னையில் ரூ.110 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள GX குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காணொலி வாயிலாக வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com