மா சுப்பிரமணியன்
மா சுப்பிரமணியன்

ரத்த ஓவியம் தீட்டினால் ஜெயில்தான்; அமைச்சர் மா சுப்பிரமணியன்!

Published on

தமிழகத்தில் புதிதாக ‘பிளட் ஆர்ட்’ எனப்படும் புதிய வகை ஓவியத்தை பரிசளிப்பது வழக்கமாகி வருகிறது அதாவது தங்களின் ரத்தத்தின் மூலம் ஓவியம் தீட்டி பரிசளிக்கும் வழக்கத்தை இனி யாராவது தொடர்ந்தால், அவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

சீனாவில் புதுவகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால், நம் நாட்டிலும் முன்னெச்சரிக்கையாக  அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பில் உள்ளதை உறுதிப் படுத்தி வருகிறோம். மேலும் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இனி ப்ளட் ஆர்ட் எனப்படும் ரத்தத்தின் மூலம் ஓவியம் வரையும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அப்படி தடையை மீறி யாராவது செயல்பட்டால் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறைதண்டனை விதிக்கப்படும் என்று கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com