அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்

அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டுகொள்ளவில்லை! குஷ்பூ கருத்து!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கவிழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் திமுக-வின் பேச்சாளர் சைதை சாதிக் பா.ஜ.கவில் இருக்கும் நடிகைகளான குஷ்பூ, நமீதா, காயத்திரி ரகுராம், கவுதமி போன்றவர்களை பற்றி தரக்குறைவாகவும், இரட்டை அர்த்த வசனங்களை பேசியதும் சர்ச்சையானது. அந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மனோதங்கராஜ் இந்த கண்டிக்கத்தக்க பேச்சினை கண்டுகொள்ளவில்லை என்று நேற்று குஷ்பூ அவர்கள் ஒரு குற்றச்சாட்டினை வைத்திருந்தார்.

குஷ்பூ
குஷ்பூ

அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் திமுக-வின் சைதை சாதிக் பா.ஜ.கவில் இருக்கும் பெண்கள் குறித்து பேசியது பற்றியும், நடிகை குஷ்பு அந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது குறித்தும், பா.ஜ.க மகளிர் அணி போராட்டம் குறித்தும் செய்தியாளர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் கூறுகையில், "சென்னை ஆர்.கே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும் போது தான் மேடைக்குச் சென்றேன். அவர் பேசிவிட்டு வந்துமே இதுபோன்று பேசுவது சரியல்ல என மேடையில் வைத்தே அவரை கண்டித்தேன். நானும் பல மேடைகளில் பேசியிருக்கிறேன் ஆனால் தரம் தாழ்ந்து யாரையும் விமர்சித்ததில்லை என்று கூறியுள்ளார். தி .மு.க இது போன்ற பேச்சுக்களை ஏற்றுக்கொள்ளாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com