தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் சத்தியநாதனின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் சத்தியநாதனின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரராகவும் திகழ்ந்தவர் கக்கன். இவர் தமிழகத்தில் 1957 முதல் 1967 வரை கர்மவீரர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர் பதவியில் இருந்துள்ளார். அமைச்சர் பதவி வகித்தாலும் மிகவும் எளிமையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக விளங்கிய இவரது மூன்றாவது மகன் சத்தியநாதன். 61 வயதாகும் சத்தியநாதன் அரசு மருத்துவராகப் பணியாற்றி, சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார்.

சென்னை, லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்த மருத்துவர் சத்தியநாதன் நேற்று மாலை தனது வீட்டில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது இரங்கலைத்  தெரிவித்து இருக்கிறார். அவர் தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தியில்,

“தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவருமான கக்கன் அவர்களது மகன் மருத்துவர் சத்தியநாதன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனவருத்தம் அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com