வலி இல்லாமல் சிறுநீரக கல்லை அகற்ற நவீன கருவி!

வலி இல்லாமல் சிறுநீரக கல்லை அகற்ற நவீன கருவி!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீர்ப்பாதையில் உருவாகும் கற்களை மின்காந்த அதிர்வலையின் மூலம் நீக்குவதற்கான நவீனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின்காந்த அதிர்வலையின் மூலம் சிறுநீரக கற்களை நீக்கும் நவீனை கருவியை தனியார் கார் நிறுவனமான ஹீண்டாய் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இந்நிலையில், மின்காந்த அதிர்வலையின் மூலம் செயல்படும் இந்த நவீன கருவி சிறுநீரக கல்லை எவ்வாறு நீக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

மின்காந்த அதிர்வலையின் மூலம் செயல்படும் இந்த நவீன கருவியின் வாயிலாக அறுவை சிகிச்சை இன்றி, அதிக ரத்த இழப்பின்றி சிறுநீரக வழிபாதையில் உள்ள கற்களை உடனடியாக நீக்கமுடியும். அதேபோல் அதிக நேரம் மருத்துவமனையில் செலவழிக்க வேண்டிய உபாதைகள் இன்றி பகல் பொழுதிலேயே மொத்த சிகிச்சையையும் முடித்துக் கொண்டு விரைவிலேயே வீடு திரும்பிவிடலாம்.

இந்தக் கருவி மூலமாக சிறுநீர் பாதையில் இருக்கும் கற்களை மட்டுமல்ல, கல்லீரல் மற்றும் கணைய நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் கற்களையும் வலியின்றி, ரத்த இழப்பின்றி எளிதாக நீக்க முடியும் என கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com