பனிப்பொழிவால் கொசு அதிகமாக உள்ளது! காலை, மாலை என இரண்டு முறை கொசுப்புகை மாநகராட்சி நடவடிக்கை!

 கொசு
கொசு

சென்னையில் தற்போது கொசு தொல்லை அதிகமாக உள்ளது.கடந்த ஆண்டை விட இந்தாண்டு பனி அதிகமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு குறையத் தொடங்கிவிடும் ஆனால் இந்தாண்டு மார்ச் வரை பனிப்பொழிவு இருந்தது. பனியின் காரணமாகதான் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பாக காலை, மாலை என இரண்டு முறை கொசுப்புகை அடிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா , ஒரே சாலையில் இரண்டு முறையும், வீடு, வீடாக சென்றும் புகை அடிக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பகுதிகளில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் பொருட்டு டிரோன் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் கொசு மருந்து தெளித்து வருகிறோம். கடந்த மாதத்தைவிட இந்தமாதம் கொசு குறைவாகத்தான் உள்ளது. அதிகமாக இல்லை.

சென்னை, மாநகராட்சி சார்பாக கட்டப்படும் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏதேனும் சீரமைப்பு பணிகள் காரணமாக கழிப்பிடங்கள் பூட்டி வைக்கப்பட்டிருக்கலாம். மண்டலம் 5,6 மற்றும் 9 களில் கழிப்பிடங்களை சீரமைக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு பகுதிகளிலும் தனியாரிடம் இணைந்து சீரமைக்கப்படும்.கழிப்பிடங்கள் திறந்து வைக்கும் நேரம் குறித்து தனியாருக்கு முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது” என மேயர் பிரியா தெரிவித்தார்.

மேயர் பிரியா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com