சொத்துக்காக பெற்ற மகனை கூலிப்படை மூலம் கொன்ற தாய், சகோதரிகள்!

சொத்துக்காக பெற்ற மகனை கூலிப்படை மூலம் கொன்ற தாய், சகோதரிகள்!

உடனே அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அலெக்ஸ்பாண்டி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏ.எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை ஒன்றை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், அலெக்ஸ்பாண்டியின் ஐம்பத்து ஐந்து வயதான தாய் இந்திரா மற்றும் சகோதரிகள் தமிழரசி (வயது 34), கலையரசி (வயது 32) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். போலீசாரின் இந்த விசாரணையில் அலெக்ஸ் பாண்டி ஒருவரே ஆண் வாரிசு என்பதால் சொத்து முழுவதும் அவருக்கே சென்று விடும் என்ற அச்சத்தில், அலெக்ஸ் பாண்டியின் தாயார் மற்றும் அவரது சகோதரிகளே கூலிப்படை வைத்து அலெக்ஸ் பாண்டியை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தாய் இந்திரா, சகோதரிகள் தமிழரசி, கலையரசி மற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த கூலிப்படையினரான வினித் என்ற அறிவழகன் (வயது 26), விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 26), வெங்கடேஸ் (வயது 25), அழகர் (வயது 18), அப்துல் அசிஸ் (வயது 18), ராஜபாளையத்தை சேர்ந்த அந்தோணி(வயது 25) ஆகிய ஒன்பது பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com