முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

மூதறிஞர் ராஜாஜியின் 50-வது நினைவு ஆண்டு: சென்னையில் சிறப்புக் கண்காட்சி!

மூதறிஞர் ராஜாஜியின் 50-வது நினைவு ஆண்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்று வரும் , சிறப்பு புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வாழ்த்தினார்.

மூதறிஞர் இராஜாஜியின் 50-ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு அவரது அரசியல், இலக்கியம், ஆட்சி நிர்வாகம், வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியை நேற்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

1878-ம் ஆண்டு பிறந்த ராஜாஜி, வக்கீலாக தன்னுடைய பணியை தொடங்கி, மதுவிலக்குக்கு எதிராகவும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்திலும் தன்னுடைய பங்களிப்பை ஆற்றியவர். சென்னை மாநில முதலவராகவும் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தவர். இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சி ஜனவரி 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com