‘எனது குடும்பமே என்னை கொலை செய்ய முயற்சிக்கிறது’நடிகர் பொன்னம்பலம் பரபரப்பு!

‘எனது குடும்பமே என்னை கொலை செய்ய முயற்சிக்கிறது’நடிகர் பொன்னம்பலம் பரபரப்பு!

ஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த முத்து, சரத்குமார் நடித்த படமான நாட்டாமை, சத்யராஜ் படமான வால்டர் வெற்றிவேல் போன்ற பிரபல திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பொன்னம்பலம். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்ற பொன்னம்பலம், சில மாதங்கள் கழித்து, தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சை செய்ய உதவி தேவை’ எனவும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதைத் தொடர்ந்து, நடிகர்கள் விஜய்சேதுபதி, கமல்ஹாசன், சிரஞ்சீவி, பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் அவரது மருத்துவத்துக்காக உதவி செய்ய முன்வந்தனர். அதைத் தொடர்ந்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருக்கிறார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகர் பொன்னம்பலம், ‘தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தனக்கு மதுபானத்தில் (Slow Poision) விஷம் வைத்து தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்’ என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறுகையில், “ஒரு நாள் சாப்பாடு சாப்பிட்டபின் எனது உடல் நிலை மோசமானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே உடலில் செலுத்தப்பட்ட அதே வகையான விஷம் நான் சாப்பிட்ட உணவில் கலந்திருப்பதாகக் கூறினர்.

ஒரு நாள் நான் எனது அறையின் வாசலில் நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தொலைவில் எனது உதவியாளரும், எனது அலுவலகத்தில் மேனேஜராக உள்ள எனது அண்ணனும் கையில் ஏதோ பொம்மை மற்றும் எனது உடைகள் போன்ற பொருட்களை மண்ணில் புதைத்துக் கொண்டிருந்தனர். அதையடுத்து, எனது உதவியாளரை மட்டும் ஒரு தனி அறையில் வைத்து அவரை மிரட்டி விஷயத்தைக் கேட்டபோதுதான், மது பானத்தில் விஷம் வைக்கப்பட்டதும், அதனால்தான் எனக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்தது. அதோடு, சூனியம் போன்ற செய்வினைகளும் எனக்கு வைக்கப்பட்டது தெரிய வந்தது.

‘நான் மது அருந்தியதால்தான் எனது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது’ என ஊடகங்களில் பேசப்பட்டது. ஆனால், எனது அண்ணனே எனக்கு மதுவிலும், உணவிலும் விஷம் வைத்ததால்தான் எனது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. எனது தந்தைக்கு நான்கு மனைவிகள். அதில் மூன்றாவது மனைவியின் மகன்தான் எனது அலுவலகத்தில் மேனஜராக உள்ளார். நான் சினிமாவில் சம்பாதித்த அனைத்தையும் எனது குடும்பத்துக்குதான் செலவு செய்துள்ளேன். எனது வளர்ச்சி பிடிக்காமல் எனது அண்ணனே என்னை கொல்ல முயற்சிக்கிறார்’' என்று அந்தப் பேட்டியில் பொன்னம்பலம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com