நாமக்கல் ஆஞ்சநேயர்
நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இனி கியூ.ஆர் குறியீட்டில் காணிக்கை செலுத்தலாம்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கியூ.ஆர் குறியீடு (QR Code) மூலம் காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. மொத்தம் 18 அடி உயரம் கொண்ட, ஒற்றை கல்லினால் ஆன இந்த ஆஞ்சநேயரை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கியூ.ஆர் குறியீடு மூலம் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை நேரடியாக கோயில் நிர்வாகத்தின் வங்கி கணக்கிற்கு சென்று விடும்.

மேலும் கோயில் கட்டளைத்தரார்கள் மற்றும் பக்தர்கள் செலுத்தும் அபிஷேக கட்டணங்களையும் கியூ ஆர் குறியீடு மூலம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com