பிச்சாவரத்தில் புதிய மாங்குரோவ் காடுகள் - பசுமை இயக்கத்தின் சார்பில் அரங்கேறும் தமிழக வனத்துறையின் மெகா திட்டம்!

பிச்சாவரத்தில் புதிய மாங்குரோவ் காடுகள் - பசுமை இயக்கத்தின் சார்பில் அரங்கேறும் தமிழக வனத்துறையின் மெகா திட்டம்!

சதுப்புநிலக்காடுகள் என்றாலே சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பிச்சாவரம் நினைவுக்கு வரும். பசுமை இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் பிச்சாரவரம் காடுகளை மேம்படுத்துவதும் முக்கியமான இடத்தை பெறுகிறது. இதனால் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வட தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத்தளமாக பிச்சாவரம் இருந்து வருகிறது. ஆண்டு முழுவதும் இங்கே சீசன் உண்டு. சதுப்புநிலக்காடுகளின் வழியாக படகு போக்குவரத்து தினமும் உண்டு. கடந்த 30 ஆண்டுகளாகவே கடலூர், சிதம்பரம் பகுதிக்கு பிச்சாவரம் மூலம் பெரிய அளவில் கவனம் கிடைத்து வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 45 சதுர கி.மீ தூரத்திற்கு சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ளன. அவற்றில் ஏறக்குறைய 8 சதர கி.மீ பரப்பளவு உள்ள காடுகளை பிச்சாவரம் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள காடுகளை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். அதே நேரத்தில் புதிய காடுகளை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

தமிழக அரசின் வனத்துறை அமைச்சகம், பசுமை இயக்கத்தின் சார்பில் பிச்சாவரம் பகுதியில் புதிதாக மாங்குரோவ் காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 67 சதுர கி.மீ பரப்பளவில் ஏற்கனவே உள்ள சதுப்பு நில காடுகளை பத்திரமாக பராமரிப்பதற்கும் கூடுதலாக 15 ஹெக்டோரில் புதிதாக மாங்குரோவ் காடுகளை புதிதாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

மெக்சிகோ, தாய்லாந்து, கம்போடியா, பாலி தீவுகளில் நடைமுறையில் உள்ள மைட்டோகாண்ட்ரியன் முறையில் புதிய காடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. பிஷ்போன் மாடல் முறையில் சதுப்பு நிலக்காடுகளுக்கு தண்ணீரை மடைமாற்றி வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சதுப்புநிலக்காடுகளின் பரப்பளவை 67 சதுர கி.மீ அளவுக்கு உயர்த்த முடியும்.

மைட்டோகாண்ட்ரியன் மாடல் என்பது சதுப்பு நிலக்காடுகளாக இல்லாத பகுதிகளை சதுப்பு நிலங்களாக மாற்றியமைத்து பின்னர் அதில் மாங்குரோவ் செடிகளை நட்டு, சதுப்புநிலக் காடுகளை உருவாக்குவதாகும். அதற்காக கிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயன்படாத நிலங்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பலன் தந்தாலும், பிச்சாரவரம் போன்ற பகுதிகளில் சாத்தியமா என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்னர் சாத்தியமில்லை என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அதற்கான அதற்கான சூழல் வந்திருக்கிறது. வழக்கமான சதுப்புநிலக்காடுகளில் மாங்குரோவ் செடிகளை நட்டு, வளர்ப்பதை விட இத்தகைய முறையில் இரு மடங்கு பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

பிளாஸ்டிக் பொருட்கள்தான், மாங்குரோவ் காடுகளுக்கு எமனாக அமைகின்றன. பிச்சாவரம் பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. சதுப்பு நிலைக்காடுகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சிக்கிக்கொண்டால்

அதை அகற்றுவது சிரமம். மாங்குரோவ் காடுகளையும் அழுக வைத்து அழித்து விடுகின்றன. சதுப்புநிலக்காடுகள் உள்ள சுற்றுலாத்தளங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்வது நல்லது என்கிறார்கள். சூழலியல் நிபுணர்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com