சென்னையில் புத்தாண்டு - எங்கே கொண்டாடலாம்?

சென்னையில் புத்தாண்டு - எங்கே கொண்டாடலாம்?

சட்டம் ஒழுங்கு பிரச்னை, கொரானா பரவல் அதிகரிப்பதால் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது போன்ற வழக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி, இம்முறை பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்திருக்கின்றன.

இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருக்க முடியும். கடற்கரை சாலையில் இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. காவல்துறையினர் இரவு முழுவதும் ரோந்து செல்வார்கள். ரோந்து வாகனங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்புப் பணிகள் தொடரும்.

சென்னையின் ஸ்டார் விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் உண்டு.போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிந்தால் உடனடியாக விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும். இரண்டு வாகனங்கள் ஒன்றாக சாலையில் பயணம் செய்யக்கூடாது. இரு சக்கர வாகனங்களில் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்டுவார்கள்.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை பெருநகர காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது. மெரீனா, சாந்தோம், பெசன்ட் நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் தடை செய்யப்படுகிறது.

இன்று மாலை முதல் சென்னையின் வணிக வளாகங்கள் அனைத்தும் நிரம்பி வழியும் என்பதில் சந்தேகமில்லை. கடற்கரையோரங்களுக்கும் செல்ல முடியாது. வேறு எங்குதான் செல்வது?

தென் சென்னைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சென்னைக்கும் வரப்பிரசாதமாக வந்திருக்கிறது, கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர்.

கிண்டியில் மேம்பாலம் வருவதற்கு முன்னர் கத்திப்பாரா முனை என்றொரு சந்திப்பு இருந்தது. தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் கத்திப்பாராவை கடந்துதான் சென்னை மாநகரத்திற்குள் உள்ளே வரமுடியும். சென்னை பெருநகரத்தின் நுழைவாயிலாக கத்திப்பாரா இருந்தது.

கையில் புறாவை ஏந்தியபடி நிற்கும் நேரு சிலை இதுதான் அடையாளம்.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்த சிலை. எம்.ஜி.ஆர் பங்கேற்ற கடைசி பொதுநிகழ்வு என்கிற பெருமையும் இதற்கு உண்டு.

புதிதாக மேம்பாலம் வந்தபின்னர் கத்திப்பாரா என்னும் பெயரே நிறைய பேருக்கு மறந்துவிட்டது. இந்நிலையில் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதிகளை சீர்படுத்தி, பூங்காங்கள், நடைபாதைகள், கடைகள் அமைத்து ஒரு மினி தி.நகரை உருவாக்கியிருக்கிறார்கள். கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கும் என்று பெயரிடப்பட்டுள்ள பகுதி, இரவு நேரங்களில் ஜொலிக்கிறது.

சென்னையின் எந்த மூலையிலிருந்தும் பஸ், ரயில் வசதி உண்டு. ஆலந்தூர் மெட்ரோ நிலையத்திற்கு வெகு அருகில் என்பதால் போக்குவரத்திற்கு எந்தப் பிரச்னையும் இல்லை. வாகனங்களில் வந்தாலும், போதுமான பார்க்கிங் வசதி உண்டு. ஏரளமான உணவுக்கடைகள் உண்டு. குடும்பத்தினருடன் வாக்கிங் செல்ல முடியும். இங்கே புத்தக்கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.

புத்தாண்டை சிக்கனமா, சிம்பிளாக எந்த அலைச்சலும் இல்லாமல் கொண்டாட விரும்பும் சென்னைவாசிகளுக்கு கத்திப்பாரா ஸ்கொயர், நல்ல சாய்ஸ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com