ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது! ஆளுநர் அதிரடி!

சென்னை கிண்டி ராஜ்பவனில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுடன் “தமிழ்நாடு தர்ஷன்” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று ஆளுநர் கூறியுள்ளார்.

ஏழு நாள் சுற்றுப்பயணமாக பனாரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து 18 மாணவ, மாணவிகள் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் தமிழ்நாடு வந்துள்ள நிலையில் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மாணவ மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறும் உண்டு. ஹிந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது.

இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது என்றார். இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது என்று தெரிவித்த ஆளுநர் ரவி, சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்று குறிப்பிட்டார்.

RN ravi
RN ravi

தமிழ் அல்லாத பிறமொழி பேசுபவர்கள் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும், தமிழை ஆழமாக படிக்க வேண்டும் என்றும், தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும் என்றும் மாணவர்களிடம் தெரிவித்தார். மேலும் தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று கூறிய ஆளுநர், 2047ஆம் ஆண்டு உலகத்துக்கு தலைமை ஏற்கும் நாடாக இந்தியா விளங்கும் என்ற கூறினார்.

திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல். எனவே அனைவரும் திருக்குறளை ஆழமாக பயில வேண்டும் என்றும் திருக்குறள் போல் தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com