விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராவிட்டால் தனியார் பள்ளிகளுக்கு நோ ரிசல்ட்!

விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராவிட்டால் தனியார் பள்ளிகளுக்கு நோ ரிசல்ட்!

பிளஸ் டூ தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்து விட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வுகளும் இன்னும் ஓரிரு நாட்களில் முடிய உள்ளது. இதனையடுத்து தேர்வு தாள்களை திருத்தும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருக்கும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதன்படி நாளை முதலே தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும் என்று அதில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

அது மட்டுமின்றி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள்  திருத்தும் பணிக்கு வந்தால்தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவில் வராததால் விடைத்தாள் திருத்தும் பணிகளில் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாகவே தற்போது தேர்வுத்துறை இயக்குநர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். தனியார் பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அத்தனை பேரும் இந்தப் பணிக்கு வர வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வராவிட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது. ஆசிரியர்களை அனுப்ப தவறினால் அந்த பள்ளி மாணவர்களின் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படாது.

’தமிழ் பிரிவு ஆசிரியர்கள் தமிழ் வழி மாணவர்களுக்கும், ஆங்கில வழி ஆசிரியர்கள் ஆங்கில பிரிவு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகளைச் செய்ய வேண்டும்’ என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தனியார் பள்ளிகள் தங்கள் ஆசிரியர்களுக்கு இன்றுக்குள் (18.04.20230 அந்த நியமன ஆணையினை வழங்க வேண்டும் என்றும் அதில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அரசு பள்ளிகள் / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் / தனியார் (மெட்ரிக் / ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்) அனைத்திலிருந்தும் பத்தாம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பள்ளி ஆசிரியர்களை தவறாமல் பணியிலிருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எந்தவொரு பள்ளியிலிருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும். எனவே, ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கைப் பட்டியலை (Teachers Profile) தவறாது சரிபார்த்து ஆசிரியர்கள் விடுபடாமல் வரவழைத்தல் வேண்டும்.

மேலும், ஒரு கல்வி மாவட்டத்தில் இரு முகாம்கள், மூன்று முகாம்கள் அமைக்கப்பெற்றிருப்பின் முகாம்களின் தேவைக்கேற்ப விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை (CE AE, SO & MVO) சரிவர பிரித்து ஒதுக்கீடு செய்திடுமாறு தெரிவித்துக் கொள்கிறோம். மதிப்பீட்டுப் பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 18.04.2023க்குள் நியமன ஆணையினை தவறாமல் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்வில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com