ஆன்லைன்
ஆன்லைன்

இனி எல்லா வரியும் ஆன்லைனில் தான் கட்டணும்; தமிழக அரசு!

தமிழகத்தில் இன்று ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி உட்பட அனைத்து வகையான வரிகளையும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்தமுறை நடந்த சட்டமன்றப்‌ பேரவையில்,‌ கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள்‌ செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில்‌ வரி, குடிநீர்க்‌ கட்டணம்‌, விளம்பர வரி, உரிமக்கட்டணம்‌ போன்றவற்றை இணைய வழியின்‌ மூலம்‌ செலுத்தும்‌ வசதி உருவாக்கப்படும்‌ என அறிவிக்கப் பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக, தமிழ்நாட்டில்‌ ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்‌ அனைத்து வரிகள்‌ மற்றும்‌ கட்டணங்களை இணையதளத்தின்‌ மூலமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கு உதவும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தேசிய தகவலியல்‌ மையத்தால்‌ நிதிப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்‌ மென்பொருள்‌ நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறையின்‌ இணையதளம்‌ வழியாக பொதுமக்கள் வரியினங்கள் செலுத்தலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டில்‌ இன்று முதல் அனைத்து ஊராட்சிகளிலும்‌ ஆன்லைனில் மட்டுமே  வரியினங்கள்‌ வசூலிக்கப் பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com