கணக்கில் வராத லஞ்ச பணத்தை அள்ளி வெளியே வீசிய அதிகாரிகள்... அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலீஸார்!

கணக்கில் வராத  லஞ்ச பணத்தை அள்ளி வெளியே வீசிய அதிகாரிகள்... அதிரடி காட்டிய  லஞ்ச ஒழிப்பு போலீஸார்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களிலும், சோதனை சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசு அலுவலங்களுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் எழுந்துவருகிறது. இதன் எதிரொலியாக லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசு அலுவலகங்களான வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்துதுறை, மின்சார வாரியம் உள்ளிட்ட 12 துறைகளின் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

cash
cash

திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 1,53,000 பறிமுதல் செய்யப் பட்டது. ஒசூர் ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் கணக்கில் வராத 1,04,050 கைப்பற்றப் பட்டது.அதேபோல் திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் நடத்தப் பட்ட சோதனையில் ரூ. 2,09,000 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப் பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப் பட்ட ஆய்வில் கணக்கில் வராத 15,000 ரூபாய் கைப்பற்றப் பட்டது. அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 2 லட்ச ரூபாய் பணம் சிக்கியது. பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இடைத் தரகர்கள் தப்பியோடினர். அங்கு கணக்கில் வராத 8,41,000 பறிமுதல் செய்யப் பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் நசரத் பேட்டையில் போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையை கண்ட ஊழியர்கள், கையில் வைத்திருந்த லஞ்ச பணத்தை அள்ளி வெளியே வீசினர். அவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com