ஆன்லைன் ரம்மி மோகம்! பட்டதாரி வாலிபர் தற்கொலை. பெற்ற தாய் வேதனை...

ஆன்லைன் ரம்மி மோகம்! பட்டதாரி வாலிபர் தற்கொலை. பெற்ற தாய் வேதனை...

ன்லைன் சூதாட்டத்தால் பணத்தை  இழந்து மன உளைச்சல் அடைந்த இளைஞர்கள் தற்கொலையை நாடுவது அதிகரித்து வரும் சூழலில் தற்போது, கோவையைச் சேர்ந்த மேலும் ஒரு  பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி நாகலட்சுமி . இவர் கோவை அரசு மருத்துவமனையில் வேலை செய்கிறார். இவர்கள் மகன் மதன்குமார் 25 வயது. பி எஸ் சி, ஐ. டி படித்து விட்டு வேலை தேடி வந்தார். வேலையில்லாத காரணத்தால் செல்போனில் ரம்மி மற்றும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக பப்ஜி விளையாட்டில் இவர் தீவிரம் காட்டியதுடன் தூங்காமல் பல மணி நேரம் இந்த விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் தலைவலியுடன்  கண்பார்வை பாதிப்பும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்காக மதன்குமார் சிகிச்சை பெற்றும் நோய் பாதிப்பு குறையவில்லை எனத் தெரிகிறது.

ரோக்கியம் பாதித்ததால்  இவர் விரக்தியுடன் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது தாய் இனி ஆன்லைனில் ரம்மி விளையாட கூடாது என்று கண்டித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மதன்குமார் பணத்தை இழந்ததை தாயிடம் தெரிவிக்காமல் மதன்குமார்  மறைத்து விட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நாகலட்சுமி வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது கதவு தாளிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது மதன்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் தற்கொலை செய்யும் முன் மதன் குமார் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் “நான் பப்ஜி விளையாட்டில் தீவிரமாக இருந்தேன். அதனால் என் பார்வை குறைந்துவிட்டது தீராத தலைவலியால் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்த பிரச்னைகளால் என்னால் வாழவே முடியாது எனவே தற்கொலை செய்யப் போகிறேன். என் சாவிற்கு வேறு யாரும் காரணம் இல்லை’’ என எழுதியிருந்தார்.

மகன் வேலைக்குச் செல்லவில்லை என்பதால் அவர் செலவுக்காக தன்னை வருத்திக்கொண்டு தாய் நாகலட்சுமி பகலில் பால்வாடி மையத்தில் சமையல் வேலையிலும் இரவில் மருத்துவமனையில் துப்புரவு பணியும் செய்து வருகிறார். மதன் வேலைக்கு போகாமல் இருப்பதால் அவரின் செலவிற்கு அதிக பணம் தேவைப் படும் என அவர் இரவு பகலாக வேலை செய்து வந்ததும் அவர் கஷ்டப்பட்டு வந்த நிலையில் மதன்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. பல மாதங் களாகியும் அதற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் தாமதம் செய்து வரும் நிலையில் அவரது   கவனத்திற்கு இந்தத் தற்கொலை செல்லுமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com