ஓபிஎஸ் - இபிஎஸ். இருவரையும்  சந்திப்பேன்? - சசிகலா..!

ஓபிஎஸ் - இபிஎஸ். இருவரையும் சந்திப்பேன்? - சசிகலா..!

அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி. நகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆர் உருவப்படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது-

தொண்டர்களுடன் இணைந்து எம்ஜிஆருக்கு மரியாதை செய்தது மகிழ்ச்சி. ஆளுநர் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தெரியாது போது அதன் மீது கருத்து சொல்வது சரியாக இருக்காது.

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அதிமுக அல்லது தமிழ்நாடு மட்டும் முடிவு செய்திட முடியாது. எல்லா மாநிலங்களின் பங்கும் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெயலலிதா இருந்தபோதது ஆளுநர் உரை தயாரித்து ஆளுநருக்கு அனுப்பப்படும். ஆளுநர் திருத்தங்கள் கூறிய பிறகு மறுபடியும் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். திமுகவினர் எத்ததனை முறை அனுப்பினார்கள், அந்த விவகாரம் குறித்து எனக்கு தெரியவில்லை. 

ஆளுநரிடம் சண்டையிட்டு கொண்டே இருந்தால், மக்களுக்கு திமுக எவ்வாறு நன்மை செய்ய முடியும்?  திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும் என சசிகலா கூறியுள்ளார். 

எந்த மாநில ஆளுராக இருந்தாலும் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்ற ஒரு முறை இருக்கிறது. ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல், ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும். ஆளுநருடனான மோதல் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும். திமுக கூட்டணி கட்சிகள் அரசு சரியில்லை என்று உள்ளத்தில் பேசிக் கொண்டாலும் எதிர்த்து அறிக்கை விட தயாராக இல்லை. 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து, திமுகவை வீழ்த்தி, அதை மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரிடம் சமர்ப்பிப்போம். திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு, எனக்கு என்ன பயம்? விரைவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திட்டம் உள்ளது. ஜல்லிக்கட்டு வர காரணம் அதிமுக தான் என்பது அனைவருக்குமே தெரியும் என சசிகலா கூறினார். 

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவினரை விரைவில் சந்திப்பேன். அவர்களைச் சந்திக்க செல்லும் போது நிச்சயம் உங்களிடம் சொல்லிவிட்டு செல்கிறேன். அனைவரையும் இணைக்கும் பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com