வாடிக்கையாளருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு Paytmக்கு உத்தரவு!

வாடிக்கையாளருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு Paytmக்கு உத்தரவு!

டிஜிட்டல் பேமெண்ட் போர்ட்டல்களுக்கு தங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது என உயர்நீதிமன்றம் தனது சமீபத்திய உத்தரவு ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஆர்.பவித்ரா டிஜிட்டல் பேமண்ட் போர்ட்டல் மூலமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட போது ரூ.3 லட்சத்தை ஹேக்கர்கள் மூலம் இழந்து விட்டார். இது தொடர்பாக அவர் தான் வங்கிக் கணக்கு வைத்திருந்த யூனியன் பேன்க் ஆஃப் இந்தியாவுக்கு புகார் அனுப்பிக் கேட்ட போது, வங்கி தரப்பில் இருந்து, திருட்டு நடந்தது வங்கி மூலமான பணப்பரிவர்த்தனையின் போது அல்ல, Paytm மூலமான பணப்பரிவர்த்தனையின் போது தான். Paytm சமர்பித்த பணப்பரிவர்த்தனை தகவல்களின் படி அங்கும் வாடிக்கையாளரின் பரிவர்த்தனைகள் பாதுகாப்புடன் கையாளப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே வங்கிக்கும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட பண இழப்புக்கும் சம்மந்தமில்லை என்பதாக பதில் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதே சமயம் உயர்நீதிமன்றம்,

"பேடிஎம், கூகுள் பே, அமேசான் பே போன்றவற்றைப் பயன்படுத்த பொதுமக்கள் ஊக்குவிக்கப்பட்டாலும், மூன்றாம் தரப்பினரின் மீறல்கள் அல்லது மோசடியான தலையீடுகள் காரணமாக வாடிக்கையாளர் பாதிக்கப்பட்டால் அதற்குரிய தீர்வுகள் அளிக்கப் படாமல் வங்கியும், டிஜிட்டல் பேமண்ட் போர்ட்டல்களும் வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கின்றன" என்று குற்றம் சாட்டியது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், வங்கிகள் மற்றும் ப்ரீபெய்டு செலுத்தும் கருவிகள் இரண்டிற்கும் ரிசர்வ் வங்கி முதன்மையான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தாலும், ஒவ்வொரு நிறுவனமும் மற்றவர் மீது பழியை மாற்றிக் கொள்கின்றனவே தவிர, இதனால் ஏற்பட்ட இழப்பை யார் தாங்க வேண்டும் என்பது குறித்து யாரும் உறுதியான யோசனையை முன்வைக்கவில்லை. இதற்கு நடுவில் மனுதாரர், அவர் எந்தத் தவறும் செய்யவில்லை," என்று மருத்துவர் ஆர் பவித்ராவைக் குறிப்பிட்டு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Paytm ஒரு தனியார் நிறுவனம் என்பதாலும், ரிட் மனுவின் கீழ், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட பண இழப்புக்கு Paytm நிறுவனம் தான் பொறுப்பு, எனவே இழந்த பணத்தை மீண்டும் இழப்பீடாக வழங்ககோரும் உத்தரவை உச்சநீதிமன்றத்தால் வழங்க முடியாது என்பதாலும் ரிசர்வ் வங்கிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றஉத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியானது,

“ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பிளாட்ஃபார்மில் Paytm உரிமை கோரும் பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் வாடிக்கையாளருக்குத் தெரியாமல் அல்லது கணக்கு விவரங்களைப் பகிராமல் எந்தத் தகவலும் வெளியில் செல்லாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவ்விதமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளில் ரிசர்வ் வங்கி தலையிடாது" சுட்டிக்காட்டியிருந்தது

ஆனால், இந்த விவகாரத்தில், அனைத்து ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனங்களுக்கும் கடந்து செல்வதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. மனுதாரர் தனது வங்கியில் உடனடியாக புகார் செய்ததை சுட்டிக்காட்டும் போது, "ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி, பணபரிவர்த்தனை விஷயத்தில் அலட்சியம் வாடிக்கையாளர் பங்கில் இருந்ததா இல்லையா என்பது குறித்தும், இந்த இழப்புக்கு மனுதாரர் பொறுப்பு என்பதையும் Paytm நிறுவனம் 90 நாட்களுக்குள் நிறுவ வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டது. இதனால், RBI வழிகாட்டுதல்களின்படி, அந்தத் தொகை Paytm நிறுவனம் வாடிக்கையாளருக்குத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

- என்று உயர்நீதிமன்றம் கூறியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com