தாம்பரம்-செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை

தாம்பரம்-செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை

தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் அந்த்யோதயா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம் ரயில் முனையமாக மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 15 ம் தேதி தாம்பரத்தி லிருந்து செங்கோட்டைக்கு செல்லும் அந்த்யோதயா சிறப்பு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் சேவை துவங்கப்பட்டது. வாரம் 5 நாட்கள் இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரயில் பகல் நேரம் பயணிக்கும் பயணிகளுக்கு வசதியாக இயக்கப்பட்டது.

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை விருதுநகர், சிவகாசி வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் தாம்பரத்தில் காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு சிவகாசி வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.48 மணிக்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். அதே போல் செங்கோட்டையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்பும் வழியாக இரவு 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதாக பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அனைவருக்கும் பலன் அளிக்கும் அந்த்யோதயா சிறப்பு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com