தற்கொலைகளை தடுக்க 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை!

தற்கொலைகளை தடுக்க 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை!

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை நிரந்தரமாகத் தடை செய்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.

மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ்,

அசிபேட், ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ் சைபர்மெத்ரின் மற்றும் குளோர்பைரிபாஸ் உள்ளிட்ட ஆறு பூச்சி கொல்லி மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு இந்த பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தினரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரமாக தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 2 லட்சம் பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்கின்றனர்.

பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கிடைப்பதை தடுக்கும் வகையில் உலக நாடுகள் கடும் விதிமுறைகளை செயற்படுத்த வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது

தமிழக அரசு ஏற்கனவே 60 நாட்களுக்குத் தடை செய்து அரசாணையைப் பிறப்பித்திருந்தது. தற்போது இதனை நிரந்தமாகத் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவை. இதைப் பயன்படுத்தப்படுவதால் அதிக நச்சு விளைவை ஏற்படுத்துகிறது.  3% மஞ்சள் பாஸ்பரஸ் [ரடோல்], பூச்சிக்கொல்லி நோக்கத்திற்காக பயன்படுத்துவதை நிரந்தரமாக தடை செய்து ஆணைகள் வெளியிடப்பட்டது.

பூச்சிக் கொல்லி மருந்து குறித்து உயர்மட்டக் குழு, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்யப் பரிந்துரைத்துள்ளது. அதனடிப்படையில் குறிப்பிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com