Devaraj
செய்திகள்
அமைச்சர் சேகர்பாபு அண்ணன் தற்கொலை
அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் தற்போதைய இந்து சமய அறநிலையத்துறையில் அமைச்சராக பதவி வகித்து வருபவர் பி.கே.சேகர்பாபு. இவர் அண்ணன் பெயர் தேவராஜ், இவர் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார்.
P. K. Sekar Babu & Devaraj
இந்த நிலையில், தேவராஜ் கடந்த சில தினங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் தேவராஜ் நேற்றைய தினம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை, அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அண்ணனை பறிகொடுத்துள்ள அமைச்சர் மிகுந்த வேதனையில் உள்ளார்.