அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி; மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

அம்பேத்கர் வழியில் சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இன்று சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தையொட்டி சென்னை துறைமுகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்கலிடம் அவர் பேசியதாவது:

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மிகப்பெரிய சிற்பியான அண்ணல் அம்பேத்கர், பொருளாதார நிபுணராகவும், நீர்நிலை மேலாண்மையில் வல்லுனராகவும் விளங்கியவர். அவரது வழியில் பிரதமர் மோடி பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். அம்பேத்கார் பிறந்த இடம், லண்டனில் அவர் படித்த வீடு, மும்பையில் வாழ்ந்த இல்லம், அவர் டெல்லியில் மறைந்த இடம் உள்பட அம்பேத்கரின் 5 இடங்களை புனித தலங்களாக்கி பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

-இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோரும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com