யுவராஜ் சிங் - போக்ராஜ் சிங்
யுவராஜ் சிங் - போக்ராஜ் சிங்

'இந்தியன்2' வில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை போக்ராஜ் சிங்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும்படம் இந்தியன் 2. அதன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது மறுபடியும் துவங்கியுள்ளது.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால் , ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தொடரந்து நடத்த முடியாமல் போனது. இதனால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை

தற்போது படத்தை வேகமாக முடிக்கும் வகையில் தீவிரமாக படபிடிப்பு நடைபெற்று வருகிறது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டுள்ளது.

போக்ராஜ் சிங்
போக்ராஜ் சிங்

அங்கும் சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் உள்ள அரசு அலுவகத்திலும் படத்தின் படப்பிடி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது இந்தப் படப்பிடிப்பில் முன்னால் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை போக்ராஜ் சிங் நடித்து வருகிறார்.

இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யுவராஜ் சிங்கின் தந்தை போக்ராஜ் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் , "கேமராவுக்குப் பின்னால் இருக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். என்னை மேலும் அழகாக மாற்றியதற்கு மேக்கப் மேனுக்கு நன்றி கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டேன்" என பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com