ரஜினி மகள் வீட்டில் நடைபெற்ற நகை கொள்ளை காவல்துறை அறிக்கை!

ரஜினி மகள் வீட்டில் நடைபெற்ற நகை கொள்ளை  காவல்துறை  அறிக்கை!

ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் நடைபெற்ற நகை கொள்ளை தொடர்பாக தேனாம்பேட்டை காவல்துறை வழக்கின் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினி மகள் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் பல தகவல்கள் குறிப்பிடப் பட்டுள்ளது .

சென்னை, போயஸ் கார்டன், ராகவீர அவென்யூவில் வசித்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த பிப்ரவரி-2023 மாதம் வீட்டிலுள்ள லாக்கரில் வைத்திருந்த தங்க நகைகளை சரி பார்த்தபோது, தங்க மற்றும் வைர நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஐஸ்வர்யா E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி என்பவரை விசாரணை செய்து கண்காணித்தும், அவரது வங்கி விவரங்கள் வைத்தும், ஈஸ்வரி புகார்தாரர் வீட்டில் தங்க, வைர நகைகள் திருடியது தெரியவந்தது.

அதன்பேரில், ஈஸ்வரி என்பவரை பிடித்து தீவிர விசாரணை செய்ததில், ஈஸ்வரி, வீட்டில் சுமார் 18 ஆண்டுகளாக வேலை செய்து வருவதும், ஐஸ்வர்யா தங்க, வைர நகைகள் அடங்கிய லாக்கரின் சாவியை வைத்து செல்லும் இடம் தெரிந்து, புகார்தாரரின் ஓட்டுநர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து லாக்கரில் இருந்து சிறிது சிறிதாக தங்க, வைர நகைகள் திருடியதும், திருடிய நகைகளை விற்று சென்னையில் வீடு மற்றும் பொருட்கள் வாங்கியுள்ளதும் தெரியவந்தது.

அதன்பேரில், வீட்டில் திருடிய ஈஸ்வரி, பெ/வ.46, க/பெ.அங்கமுத்து, பள்ளி வாசல் தெரு, மந்தைவெளி, சென்னை, கார் ஓட்டுநர் வெங்கடேசன், வ/44, த/பெ.கிருஷ்ணன், மனசுரா கார்டன், திருவேற்காடு, சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து புகார்தாரர் வீட்டில் திருடிய சுமார் 100 சவரன் தங்க நகைகள், 30கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு பத்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். “ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com