அஞ்சல் சேமிப்பு திட்டம்
அஞ்சல் சேமிப்பு திட்டம்

பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் சேமிப்பு திட்டம்! ஆளுநர் ரவி துவக்கி வைத்தார்!

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, அஞ்சல் சேமிப்பு திட்டம் துவக்கி பெண் குழந்தைகளுக்கு, சேமிப்பு புத்தகத்தை வழங்கினார் ஆளுநர் ரவி.

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நேற்று பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் துவக்கப்பட்டது.

அஞ்சல் சேமிப்பு புத்தகத்தை வழங்கி பின் கவர்னர் ரவி அவர்கள் பேசுகையில், "சுகன்யா சம்ரிதி யோஜனா எனும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு துவங்குவது, அவர்களது உயர் கல்விக்குத் தேவையான பணத்தை சேமிக்க ஊக்குவிக்கும்,"என்றார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

நிகழ்ச்சியில்,சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழக அஞ்சல் வட்டம், நாட்டிலேயே அதிக அளவாக, 28 லட்சம் செல்வ மகள் சேமிப்பு கணக்கைத் துவங்கியுள்ளது.

இதில் சென்னை நகர மண்டலம் மட்டும் எட்டு லட்சம் கணக்குகளைத் துவங்கியுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அஞ்சலங்களுக்கு சென்று, அங்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் சேமிப்பு திட்டங்களை அறிந்து, அவற்றில் சேர்ந்து பயனடைய வேண்டும் என அஞ்சல் துறை கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com