வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைப்பு!

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைப்பு!

வங்கி ஊழியர்கள் பல்வேரி கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்த பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பு ஜனவரி 30, 31 ஆம் தேதிகளில் திட்டமிட்டு இருந்தது.

UFBU மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இடையேயான சமரச கூட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் முதலில் திட்டமிடப்பட்ட இரண்டு நாள் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை இந்தியாவின் ஐக்கிய வங்கி சங்கங்களின் அமைப்பு (UFBU) ஒத்தி வைத்துள்ளதாகச் அறிவித்துள்ளது. யுனைடெட் ஃபோரம் ஆ பேங்க் யூனியன்கள் (UFBU) அமைப்பின் கீழ் AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF மற்றும் INBOC ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறப்பட்டது.

அனைத்து காலி பணியிடங்களிலும், வங்கி கிளைகளிலும் போதிய ஆட்சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த வேலை நிறுத்த போராட்டம் தற்போது ஒத்தி வைக்கப் பட்டு உள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி எச் வெங்கடாசலம் இது குறித்து கூறுகையில் ஐபிஏ ஜனவரி 31 அன்று தொழிற் சங்கங்களைச் சந்தித்து ஐந்து நாள் வங்கி சேவை, ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறு சீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை விவாதிக்க ஒப்புக்கொண்டு உள்ளது.

இந்த அமைப்பு சந்திக்கும் பிற பிரச்சினைகளை, அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களுடன் தனித்தனியாக விவாதம் செய்யவே வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com